தமிழ் சினிமா செய்திகள்

உண்மையான மக்களின் முதல்வர் நடிகர் அஜித்!

திராவிட சரித்திரத்தை மாற்றி அமைக்க வா தலைவா என அஜித்தை அழைக்கும் இயக்குனர் சுசீந்திரன்

நடிகர் அஜித் முதல்வராக வந்தால்தான் தமிழகத்தின் எதிர்காலம் சிறக்கும் என இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் தற்பொழுது பேட்டி அளித்து இருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள இந்த தருணத்தில் இவரது இந்த வேண்டுகோள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் எண்ணற்ற சமூக அக்கறையுள்ள திரைப்படங்களை இயக்கி அதில் புகழும் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் தன் கைப்பட எழுதிய அந்த வேண்டுகோள் கடிதத்தில் என்ன உள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.

40 ஆண்டுகால திராவிட அரசியலில்
மாற்றத்தை உருவாக்க
உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும்.
தமிழக மக்களின் நலன் கருதி,
உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன்.
இதுதான் 100% சரியான தருணம்
வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு..,
உங்களுக்காக காத்திருக்கும்
பல கோடி மக்களில் நானும் ஒருவன்….

– சுசீந்திரன்.,

Ajith-enter-politics

இந்நிலையில், இந்த அறிக்கையை ஏற்று எதிர்வினையாற்றி உள்ள அஜித் ரசிகர்கள் “அஜித் மட்டும் போதும் அரசியல் வேண்டாம்” #அரசியல்வேண்டாம்அஜித்தேபோதும் ஹேஸ்டேக் டிரண்ட் செய்தனர். இது அஜித்தின் அரசியல் தொடர்பான நிலைப்பாட்டை தனது ரசிகர்கள் ஏற்றுக் கொண்டு அதை பிரதிபலிப்பது போல் தான் தெரிகிறது.

ஆனாலும் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என திரையுலகினரும் தமிழக மக்களும் எண்ணுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.