தமிழ் சினிமா செய்திகள்

கமலுக்கு நடிகர் பார்த்திபன் பிரம்மாண்ட ‘டார்ச் லைட்’ பரிசு…

நடிகர் பார்த்திபன் கமலஹாசன் அவர்களுக்கு பிரம்மாண்ட டார்ச் லைட் ஒன்றை பரிசளித்துள்ளார்.t

தமிழ் சினிமாவை உலக அரங்கில் கொண்டுசேர்த்த கலைஞர் என்றால் அது நம் உலகநாயகன் கமலஹாசன் அவர்களையே சேரும். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே பல்வேறு தொழில்நுட்பங்களையும் பல்வேறு கதை அம்சங்களையும் கொண்ட படங்களாகவே அமைந்தது. இவர் ஒரு பன்முக கலைஞர் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் சின்ன கமலஹாசன் என்று அழைக்கப்படும் நபர் என்றால் அது வேறு யாருமில்லை நம் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகும். இவர் புதுப்புது கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘ஹவுஸ் ஃபுல்’, ‘புதிய பாதை’, ‘இவண்’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு அழைத்து சென்றது.

இந்நிலையில், பார்த்திபன் புதியதாக ஒத்த செருப்பு என்ற படத்தினை இயக்கி வருகிறார் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் வெளியிட்டார்.

தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் ஷங்கர் கே எஸ் ரவிக்குமார் நடிகர் பாக்யராஜ் மற்றும் முன்னணி நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் பார்த்திபன் கமலஹாசன் அவர்களுக்கு பிரம்மாண்ட டார்ச் லைட் ஒன்றை பரிசளித்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.