தமிழில்

நேர்கொண்ட பார்வை வெளியாகும் தேதி

ஆகஸ்ட் 10ல் வெளியாகிறது அஜித்தின் மேற்கொண்ட பார்வை

ஆகஸ்ட் 10-ல் வெளியாகிறது அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை. இப்படம் இந்தியில் அனிருத்தா ராய் சௌவுத்ரி இயக்கத்தில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி அனைவரிடமும் பாராட்டைப் பெற்றார். படமும் சூப்பர் ஹிட் ஆனது

இந்நிலையில் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய நினைத்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தல அஜித் இதற்கு பொருத்தமாக இருப்பார் என்பதை கணித்து இப்படத்தில் அஜித்தை இடம்பெறச் செய்தார். இப்படத்தை தீரன் – அதிகாரம் 1 பட இயக்குனர் H. வினோத் அவர்கள் இயக்கியுள்ளார்.

இதில் தமிழில் தல அஜீத்துக்காக கதை மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி படத்தில் அமிதாப் பச்சன் அரை மணி நேரம் மட்டுமே வருவார் ஆனால், தமிழில் அஜித் குமார் அவர்கள் படம் முழுவதும் வருவது போன்ற திரைக்கதையை வினோத் அவர்கள் அமைத்துள்ளார்.

இன்று, நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.