தமிழ் சினிமா செய்திகள்

தர்பார் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதானாம்

தர்பார் படத்தில் நயன்தாரா கல்லூரி ஆசிரியராக நடிக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒரு வேடத்தில் போலீஸ் அதிகாரியாகவும் மற்றொரு வேடத்தில் சமூக அக்கறையுள்ள சாதாரண மனிதனாகவும் நடிக்கிறார்.

Darbar shooting spot still

தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். மற்றும் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகவேகமாக மும்பையில் நடந்து வருகின்றது. தற்போது தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய வண்ணம் உள்ளது.

அதில் ரஜினிகாந்த் கிரிக்கெட் விளையாடுவது போன்றும் யோகி பாபு ரஜினிக்கு பின்புறம் நின்று கீப்பிங் செய்வது போன்றும் அருகில் நயன்தாரா புடவையில் நின்று கொண்டிருப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதை வைத்து பார்க்கும் பொழுது நயன்தாரா ஒரு கல்லூரி ஆசிரியராக நடிக்கிறார் என்பது தெரிகிறது. இதற்கு முன்பு தல அஜித்துடன் ஏகன் படத்தில் கல்லூரி ஆசிரியராக நயன்தாரா நடித்தார் என்பது நாம் அறிந்தது. ஏகன் படத்தில் இவர் காட்டிய கவர்ச்சியை எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.