Vijay latest News: தளபதி விஜய் தனது 65வது படத்தை மீண்டும் ஒருமுறை நடிகர் சங்கர் உடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இன்று, ஜெயம் ரவி அவர்கள் தி ஹிந்து பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் எனது அண்ணன் ஜெயம் ராஜாவும் நடிகர் விஜய் அண்ணாவும் அடுத்த படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நல்ல கதை அமையும் பட்சத்தில் அதில் இணைந்து பணியாற்ற இருவரும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் அண்ணா அடிக்கடி நடிகர் ஜெயம் ராஜாவுடன் தொலைபேசியில் உரையாடி வருவதும் ஜெயம் ராஜா, விஜயுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்டிருப்பதையும் இப்பேட்டியில் நடிகர் ஜெயம் ரவி வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்மூலம் விஜயின் 66வது அல்லது 65 ஆவது படம் ஜெயம் ராஜாவுடன் என்பது உறுதியாகியுள்ளது. ஜெயம் ராஜா அவர்கள் ஜெயம் ரவியை வைத்து தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை தற்போது எடுத்து வருகிறார் இது ஜெயம் ரவியின் 25-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை விஜயுடன் ஜெயம் ராஜா இணைந்து பணியாற்றினால் அது தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு தான் அமையும் என்பதும். மேலும், அது 2022ஆம் ஆண்டு தான் வெளியாகும் என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஜெயம் ரவி கோமாளி படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார் இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது