வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா முதல் முறையாக அம்மன் வேடம் ஏற்று நடிக்கும் படம் மூக்குத்தி அம்மன். படப்பிடிப்புகள் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். புகைப்படத்தில் நயன்தாரா ஒரு கையில் சூலம் வைத்துக்கொண்டு அம்மன் கெட்டப்பில் கம்பீரமாக உள்ளார். தற்போது இந்த புகைப்படம் வெளியாகி நயன்தாரா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வருகின்ற மே மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.