தமிழில்

#MeToo விவகாரம் ஸ்ருதிக்கு எதிராக அர்ஜூன் மான நஷ்ட வழக்கு!

நடிகர் அர்ஜுனுடன் நெருங்கி வா, முத்தமிடாதே, நிபுணன் போன்ற படங்களில் நடித்த நடிகை ஸ்ருதி ஹரிஹரன். இவர் நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ‘மீ டூ‘ இயக்கம் மூலம் குற்றம்சாட்டினார்.

அர்ஜூன் உடன் ‘விஸ்மயா’ என்னும் திரைப்படத்தில் நடித்தப்போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து நடிகர் அர்ஜூன் மறுப்பு தெரிவித்தார். ஸ்ருதியின் குற்றச்சாட்டுக்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.

Arjun Sarja VS Shruti Hariharan
Arjun Sarja VS Shruti Hariharan

மேலும் அவரை கர்நாடக திரைப்பட சங்கத்தில் இருந்து தடை செய்ய வேண்டும் என்றும் சிலர் போராட்டம் நடத்தினர். பின்னர் அர்ஜூனின் மாமனாரான ராஜேஷ் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் ஸ்ருதி மீது புகார் செய்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அர்ஜூன் மற்றும் ஸ்ருதி இடையே சந்திப்பை உருவாக்கி அதன் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்தது.

அதன்படி கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் சமரச தீர்வை ஏற்க இருவருமே மறுத்துவிட்டனர். இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று சபை நிர்வாகிகள் கூறினர். இதையடுத்து, இத்தனை வருடங்கள் சினிமாவில் வாங்கிய நற்பெயரை கெடுக்கும் வகையில் ஸ்ருதி பொய்யான புகாரை கூறிவிட்டார் என நடிகர்அர்ஜன் ரூ. 5 கோடி நஷ்டஈடு கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.