லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்து வருகிறார்கள்.
முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு பாக்யராஜ் நடித்து வருகிறார். இந்நிலையில், படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் பொங்கலன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில். நேற்று மாலை 5 மணிக்கு மாஸ்டர் படத்தின் செகண்ட் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.
போஸ்டர் வெளியான சிறிது நேரத்திலேயே சுமார் 10 லட்சம் நபர்கள் ரீட்வீட் செய்தனர். இதுவரை வெளியான செகண்ட் லுக் போஸ்டர்களில் அதிக நபர்கள் ரீட்வீட் செய்த போஸ்டர் என்ற பெருமையை மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் பெற்றுள்ளது. தற்போது இந்த சாதனையை விஜய் ரசிகர்கள் வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.