Master Actress signed Hindi film with whooping salary:

தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மாளவிகா மோகனன்.
இப்படம் இன்னும் வெளியாகாத நிலையில் பல படங்களில் நடிக்க மாளவிகா மோகனுக்கு அழைப்பு வருகிறது. ஆனால் தேடி வந்த பட வாய்ப்புகளை பற்றி அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்நிலையில், ஸ்ரீதேவி நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாம்’ இப்படத்தை இயக்கியவர் ரவி உத்யவார். இவர் தற்போது சித்தாந்த் சதுர்வேதி வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு கதாநாயகி ஆக மாளவிகா மோகனன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் நடிக்க மாளவிகா மோகனுக்கு சுமார் 5 கோடி சம்பளம் பேசி உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இச்செய்தி ஒருவேளை உண்மையானால் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் மாளவிகா மோகனன் இருப்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
மாளவிகா மோகனன் ஏற்கனவே பியண்ட் தி மேக்ட்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் பல சாகச ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.