அதிரடியாக வெளியானது மாஸ்டர் படத்தில் இரண்டாவது போஸ்டர். நீங்க சட்டப் பண்ணுங்க என சைகை செய்யும் விஜய்.
தளபதி விஜய் நடிப்பில் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகவுள்ள திரைப்படமான மாஸ்டர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு தினத்தன்று வெளியானது.
இந்நிலையில் பொங்கல் திருநாளான இன்று படக்குழு இரண்டாவது போஸ்டரை அதிரடியாக வெளியிட்டு உள்ளது. இதில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி மிகவும் ஸ்டைலாக உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் வெளியான சிறிது நேரத்தில் மிகப்பெரிய ரெக்கார்டுகளை படைத்துவிட்டது.
மாஸ்டர் படத்தில் விஜய், மாளவிகா, மோகனன், ஆண்ட்ரியா, ஸ்ரீமன், சாந்தனு, மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.