‘லிப்ட்’ படத்திற்கு டப்பிங் பேசி முடித்த கவின்

kavin finishes dubbing for 'Lift'
kavin finishes dubbing for ‘Lift’

பிக் பாஸ் மூன்றாம் பாகத்தின் மூலமாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் கவின். அந்த நிகழ்ச்சியில் பல கெட்ட பெயர்களை வாங்கினாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

ALSO READ | தனுஷின் ‘கர்ணன்’ டைட்டில் போஸ்டர் வெளியானது

இதனிடையே, அறிமுக இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘லிப்ட்’.  இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிகில் படத்தில் மூலமாக பிரபலமான அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.

ALSO READ | முதல் முறையாக இந்தியில் வெளியாகும் அஜீத் படம்

இதனிடையே, தான் நடித்துள்ள காட்சிகளுக்கான டப்பிங் பேசி முடித்து விட்டதாக கவின் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே கவின் நடிப்பில் வெளியான ‘நட்புனா என்னனு தெரியுமா‘ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO WATCH |

Exit mobile version