சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த 2018 ஆண்டு வெளியான திரைப்படம் கனா.
முழுக்க முழுக்க மகளிர் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. மேலும் தமிழக அரசின் சிறந்த திரைப்படம் விருதைப் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளாராம். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்தில் நடிகை டாப்ஸி நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த முயற்சி ஒருவேளை நடந்தால் கமலஹாசனுக்கு பிறகு இந்தியில் படத்தை தயாரித்த பெருமை சிவகார்த்திகேயனுக்கு சேரும்.