தமிழ் சினிமா ரசிகர்களால் நடிப்பு திலகம், உலகநாயகன், காதல் மன்னன், நம்மவர் என பல பட்டங்களைப் பெற்று இன்று வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வரும் நபர் என்றால் அது நம் உலகநாயகன் டாக்டர் ஸ்ரீ கமலஹாசன் அவர்களே சாரும்
களத்தூர் கண்ணம்மா தொடங்கி இன்று இந்தியன் 2 வரை தனது நடிப்பால் திரையுலகை கட்டிப்போட்டு வருபவர் கமலஹாசன்.
இந்நிலையில், கமலஹாசன் நடிப்பில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் கமலஹாசன் மூன்று வேடங்களில் நடித்திருப்பார். அதில் ஒரு வேடத்தில் இடம்பெறும் ஒரு பாடலான அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ என்ற பாடல் அக்காலகட்டத்தில் மிகப் பிரபலமான பாடல்.
இந்நிலையில், அப்பாடலில் கமலஹாசன் நடனம் ஆடுவதைப் போல ஒரு நபர் நடனமாடியுள்ளார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்திலும் அந்த நபர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த உலகநாயகன் கமலஹாசன் என்னைப் போல நடனமாடியுள்ளார் என்று வெகுவாக பாராட்டியுள்ளார்.
நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!
கமல்ஹாசன்
தற்போது இந்த நபர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நாம் பார்ப்போம்