தமிழில்

ஏப்ரல் 27 அன்று வருகிறான் காலா என்கிற கரிகாலன்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள படம் காலா என்கிற கரிகாலன். தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனமான ஒண்டர் பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளியாகும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்குமுன் அந்தத் தேதியில் முதலில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம்தான் வருவதாக இருந்தது. ஆனால், அப்படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் முடிவடையாததால் அந்தப் படம் மேலும் தள்ளிப் போனது. அநேகமாக 2.0 படம் ஆகஸ்ட் வெளியாக வாய்ப்புள்ளது.

kaalaa-or-kaala-or-kala-or-karikalanஇந்தத் தகவலை அறிந்த சில தயாரிப்பாளர்கள் வரும் ஏப்ரல் 27ம் தேதி அவர்களது படங்களை வெளியிட திட்டமிட்டார்கள். அதன்படி மிஸ்டர் சந்திரமௌலி படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. மேலும் சில தயாரிப்பாளர்கள் அன்று படங்களை வெளியிட முடிவு செய்திருந்த நிலையில் காலா படத்தை அந்தத் தேதியில் வெளியிட அறிவித்துவிட்டதால் அவர்கள் வெளியிடும் என்னத்தை மாற்றிகொண்டார்கள்.

காலா ஏப்ரல் 27ம் தேதி வெளியாவதால், மிஸ்டர் சந்திரமௌலி படத்தைத் தள்ளி வைப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் அறிவித்துள்ளார். “ஏப்ரல் 27ம் தேதி காலா வருவதால் வேறு யாராலும் அன்று நிற்க முடியாது. ஏப்ரல் 27ம் தேதி எங்களது மிஸ்டர் சந்திரமௌலி படம் வெளியாகும் என்று முதலில் அறிவித்தோம். இப்போது வெளியீட்டுத் தேதியை மாற்றியமைத்து அறிவிக்க வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.

காலா அரசியல் படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை உருதிசெய்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.