
ந
டிகர் ரஜினிகாந்தை கலாய்க்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் ட்ரைலர்.
நடிகர் ஜெயம் ரவி பல்வேறு வேடங்களில் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படமான கோமாளி டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டது.
இதில் நடிகர் ஜெயம் ரவி 16 வருடங்கள் கோமாவில் இருந்து மீண்டு எழுந்து வந்த உடன் யோகி பாபு உடன் இணைந்து தனது பழைய நண்பர்களையும், தோழிகள் மற்றும் காதலிகளை சந்தித்து பழைய சம்பவங்களை பற்றி உரையாடுவது போன்ற நகைச்சுவை காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இதில் உச்சமாக ஒரு காட்சியில் நடிகர் ஜெயம் ரவிக்கு தான் எந்த ஆண்டில் தற்போது இருப்பது இருக்கிறேன் என்ற சந்தேகத்தை யோகிபாபு உடன் எழுப்புவார்.
அப்போது, அதை நிரூபிக்கும் பொருட்டு யோகிபாபு தொலைக்காட்சியை ஆன் செய்து அதில் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது அரசியல் பிரவேசம் குறித்த தகவலை வெளியிட்ட அந்த காட்சிகள் ஓடுகின்றன.
அதற்கு ஜெயம் ரவி யாரை ஏமாற்றப் பார்க்கிறாய் இது 1996 ஆம் ஆண்டு என்று கூறுவது போன்ற காட்சி அமைந்துள்ளது.
இது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் 1996 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை தான் அரசியலுக்கு வருவதாக கூறுவதை கிண்டல் செய்வது போன்று அமைந்துள்ளது.
இதற்கு ரஜினி ரசிகர்கள் எத்தகைய எதிர்வினையாற்றுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.