இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படம் அயலான்.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திடீரென இணையதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.
அது என்ன செய்தி என்றால் அயலான் படத்திலிருந்து ராகுல் ப்ரீத்தி சிங் நீக்கப்பட்டு விட்டார் என்ற செய்திதான். தற்போது இந்த செய்தி உண்மையா என்று படத்தின் இயக்குனர் ரவிக்குமாரிடம் கேட்டபோது அயலான் படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடித்து வருகிறார்.
Also See | விக்ரம் ரசிகர்களுக்கு விருந்து அளித்த கோப்ரா படக்குழு
படக்குழுவுக்கு அவருக்கும் நல்ல உடன்பாடு இருக்கிறது. இது தவறான செய்தி என்று விளக்கமளித்துள்ளார். மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சிவகார்த்திகேயன் ரசிகர் மத்தியில் அயலான் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.