இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் நடித்த இந்தியன் படம் 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும் லஞ்சம் எவ்வாறு தலைவிரித்தாடுகிறது என்பதை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட படம் இந்தியன்.
இந்நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை மீண்டும் கமலை வைத்து இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில் இன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளது படக்குழு.
இதில் இந்தியன் படத்தில் வரும் மிக பிரபலமான இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தில் கமல் இருப்பது போன்று வெளியிடப்பட்டுள்ளது.
