நடிகர் தனுஷ் அவர்களின் வெறித்தனமான நடிப்பில் வெளியாகி மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது அசுரன் திரைப்படம்.
இந்நிலையில் இப்படம் நூறு கோடி வசூலை வாரி குவித்துள்ளது. மேலும் சிறப்பம்சமாக முதன் முறையாக நடிகர் தனுஷ் அவர்கள் நடித்த திரைப்படம் 100 கோடியை தாண்டி வசூல் ஆகியுள்ளது.
விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ராகவா லாரன்ஸ் இவர்கள் வரிசையில் தற்போது நடிகர் தனுஷ் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளார்.
அசுரன் எழுத்தாளர் பூமணி எழுதிய நாவலை மையமாகக் கொண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய திரைப்படம். தீண்டாமை மற்றும் சாதிய கட்டமைப்பை தோலுரித்து காட்டும் கதை அம்சத்தை கொண்டுள்ள திரைப்படமாக உருவானது.
விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்ற அசுரன் திரைப்படம் தற்போது இத்தகைய மாபெரும் வசூலை வாரி குவித்துள்ளது.