மோகன் ராஜா இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக வேலாயுதம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா மோட்வானி.

அதன்பின்பு ஜெயம் ரவிக்கு ஜோடியாக எங்கேயும் காதல். தனுஷ்க்கு ஜோடியாக மாப்பிள்ளை. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மான்கராத்தே. என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வந்தார் ஹன்சிகா மோத்வானி.
இதையும் படியுங்கள் | மகா படத்தில் சிம்புவின் லுக் வெளியானது!
சமீபகாலமாக எந்த பட வாய்ப்புகளும் இன்றி இருக்கும் ஹன்சிகா தற்போது மகா என்ற படத்தில் கதாநாயகி நடித்துவருகிறார்.
இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை ஹன்சிகா வெளியிட்டுள்ளார் அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க என்று கிண்டல் அடித்து வருகிறார்கள்.