சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் இல்லை தென்னிந்திய சினிமாவின் வசூல் சக்கரவர்த்திகள் என்று சொல்லலாம். இவர்கள் படங்கள் வெளியானால் ரசிகர்கள் திரையரங்குகளில் படையெடுப்பார்கள்.
இந்நிலையில், விஜய்க்கும். ரஜினிக்கும் இடையே பனிப்போர் நீண்டகாலமாக நடந்து வருகிறது. இந்த பனிப்போர் இன்று நேற்று இல்லை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம்.
ரஜினி அவர்கள் பாஜக பக்கம் சாயும் பொழுது தளபதி விஜய்யும் காங்கிரஸ் பக்கம் சாய்ந்தார்.
குறிப்பாக, 2007 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி தளபதி விஜய் சந்தித்து காங்கிரஸில் இணையுங்கள் என்று சொன்னார். அப்போது இருந்தே இந்த போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், அடுத்த வருடம் தமிழகத்தில் பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தளபதி விஜய் எதிர்க்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த வருமான வரி சோதனை நடைபெறுவதாக தெரிகிறது. இந்த ரெய்டு மூலம் விஜயை தக்க வைத்துக் கொள்ள ஆளுங்கட்சி போடும் சூழ்ச்சி என்றும் ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.

இதனிடையே ரஜினி குறைந்த வட்டிக்கு பணம் கொடுத்தார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த செய்தியை ஒன்றும் இல்லாமல் ஆக்க வேண்டும் என்றால் அதற்கு தளபதி விஜய் போன்ற ஒரு பெரிய நடிகரின் செய்தியை வெளிக்கொண்டு வந்தால் அந்த செய்தி மறைந்து விடும் என்பதற்காக கூட இந்த வருமான வரி சோதனை நடந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
எது எப்படியோ ரஜினியும் விஜய்யும் ஒன்று சேர்ந்து ஏதேனும் ஒரு மேடையில் பேசினால் மட்டுமே இந்த பனி போருக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்றே கூறலாம்.