பட்டாசு படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி என இரு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இவர் இசையில் அனைத்து பாடல்களும் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தை மிக பிரம்மாண்டமாக Y NOT ஸ்டுடியோஸ் சார்பாக கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கிறார்.
இதனிடையே படம் மே மாதம் 1-ஆம் தேதி அஜித் பிறந்த நாளன்று வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில்.
தற்போது நாடு முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயின் தாக்கத்தால் படம் வெளியாகாது நிலையில் உள்ளது.
Also See | அறம்-2 பாகத்தில் நான் நடிக்கிறேனா : கீர்த்தி சுரேஷ்
இந்நிலையில், தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகப்படுத்தும் விதமாக ஜகமே தந்திரம் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளார்கள். மேலும் இப்பாடலை தனுஷ் பாடி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.