
பட்டாசு படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து படம் மே 1-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய நோய் தாக்கத்தினால் உலகமே முடங்கிப் போயுள்ளது. இதனால் படம் இன்று வெளியாகவில்லை.
தனுஷ் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கும் இந்த சமயத்தில் அவர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக படக்குழு ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த போஸ்டரில் நடிகர் தனுஷ் இயேசுநாதர் போன்று தோற்றத்தில் உள்ளார். குறிப்பாக போஸ்டர் முழுவதும் லண்டன் நகரில் பயன்படுத்தும் ஸ்டாம்ப் கொண்டு போஸ்டரை உருவாக்கியுள்ளார்கள்.
மேலும் படத்தில் நடிகர் தனுஷ் மதுரை சேர்ந்த சுருளி என்ற கதாபாத்திரத்தில் வருகிறாராம். பின்பு படம் லண்டனுக்கு செல்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், படம் ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக ஒரு புதிய தகவலும் கிடைத்துள்ளது.
