நடிகர் தனுஷ் அவர்கள் ஜீவா மற்றும் அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சர்வதேச நண்பர்கள் தினமான 4 தேதி தேதி காலை 11 மணிக்கு ட்விட்டரில் வெளியிடுகிறார்.
இப்படம் ஜீவாவின் தந்தையான ஆர்பி சவுத்ரி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் இன் 90ஆவது திரைப் படமாக உருவாக இருக்கிறது.
முதல்முறையாக அருள்நிதி நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். மேலும் இவர்களுக்கு ஜோடியாக நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ராஜசேகர் என்ற இயக்குனர் இயக்குகிறார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பு உள்ளது.
