Dhanush Birthday: நடிகர் தனுஷ் அவர்கள் வரும் 28ம் தேதி தனது 36-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளதையொட்டி அவரது ரசிகர்கள் ட்விட்டரில் பொது DP வைக்க இன்று பொது DP புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர்.

அதில் நடிகர் தனுஷ் வேட்டி சட்டை அணிந்து கதிர் அரிவாளை கையில் ஏந்தி நடந்து வருவது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது இது தலைப்பு எங்கள் தலைவா என பெயர் வைத்துள்ளனர்.
தற்போது, நடிகர் தனுஷ் ‘அசுரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.
ஆடுகளம் படத்திற்குப் பிறகு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
ஏனெனில், தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் கூட்டணி இதற்கு முன்பு சேர்ந்த அனைத்துத் திரைப்படங்களின் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
ஆகையால், இந்தக் கூட்டணியை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், வெற்றிமாறன் மீண்டும் தனுஷை வைத்து இயக்கும் படம் என்பதோடு இது கிராமத்தின் மறுபக்கத்தைப் பிரதிபலிக்கும் கதை என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.