டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் படம் ‘கோப்ரா’.
இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப் புகழ் ஸ்ரீனிதி ஷெட்டி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கிறார்.
ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி விக்ரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே, கோப்ரா படத்தின் முதல் பாடலான ‘தும்பி துள்ளல்’ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.
கோப்ரா படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இவர் இசையில் ‘தும்பி துள்ளல்’ பாடல் எவ்வாறு இருக்கும் என்று விக்ரம் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், தான் ‘தும்பி துள்ளல்’ பாடலில் இடம்பெறும் காட்சிகள் கொண்ட புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
தற்போது இந்த புகைப்படங்களை விக்ரம் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள்…



