அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் பல வேடங்களில் நடிக்கும் திரைப்படம் கோப்ரா. படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எப் படத்தில் நடித்து பிரபலமான ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.

படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இவர் இசையில் அனைத்து பாடல்களும் படமாக்கி உள்ளனர் படக்குழு.
இந்நிலையில், கோப்ரா படத்தின் முதல் பாடல் ‘தும்பி துல்லால்’ வருகின்ற திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்கள்.
சியான் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை பெரும் பொருட்செலவில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித் குமார் தயாரிக்கிறார்.