பிகில் படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படமான திகில் திரைப்படத்தின் முதல் பாடலான சிங்க பெண்ணே பாடல் சென்ற வாரம் தான் படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்நிலையில் அடுத்த பாடலான ஏ ஆர் ரகுமான் இசையில் தளபதி அவர்கள் பாடிய வெறித்தனம் என்ற பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் இன்று படக்குழுவினரை அதிர்ச்சியாகும் சூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் படக்குழுவினர் விஜயை வைத்து பைக் ரேஸ் செல்வது போன்ற காட்சியை பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.
அதை பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பகுதி மக்கள் ஆரவாரம் எழுப்பும் பொழுது, ரசிகர்களை என்றுமே மதிக்கும் தளபதி விஜய் சூட்டிங்கை பாதியிலேயே நிறுத்திவிட்டு இறங்கி ரசிகர்களுக்கு கையசைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
#ThalalathyVijay riding super stylish bike | From #Bigil shooting spot ?? #BigilPodalaamapic.twitter.com/7IhxMiSVzF
— Live Cinema News (@LiveCinemaNews) August 4, 2019