வரும் 23ம் தேதி பிகில் திரைப்படத்தின் ‘சிங்க பெண்ணே’ என்ற பாடல் வெளியாகும் என்று படக்குழு செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இன்று ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் விவேக் ‘சிங்க பெண்ணே’ பாடல் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடுவில் கால்பந்தை மிதித்தவாறு நிற்கிறார். அவர் பயிற்றுவிக்கும் மகளிர் அணி அணியினர் அவரின் வலது பக்கமும், இடது பக்கமும் நின்று கொண்டிருக்கிறார்கள்.
இப்புகைப்படம் வெளியான சில நிமிடங்களில் உலக அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி சாதனை படைத்துள்ளது. மேலும், இதை கொண்டாடும் விதமாக இந்திய ட்விட்டர் டிரெண்டிங் இது தொடர்பான செய்தியை வெளியிட்டு படக்குழு மற்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
The first single from #Bigil is almost here. #Singappenney #BigilPodalaama https://t.co/F81UKLkcqD
— Twitter Moments India (@MomentsIndia) July 20, 2019
விஜய் பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடிக்கிறார் என்று நாம் இதற்கு முன்பு அறிந்த செய்திதான். மேலும் அவர் தனது கதாபாத்திரம் மைக்கேல் என்றும் இந்திய அணி உலகக் கோப்பைக்கு கொண்டு செல்வது போன்ற கதை அமைப்பும், இந்தியாவில் கால்பந்தாட்டத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வருகிறது.