தமிழ் சினிமா செய்திகள்

5000 பேருக்கு அஜித் செய்த உதவி!

தல அஜித்குமார் சுமார் 5000 நபர்களுக்கு கண் பார்வையை திரும்பப் பெற்று தந்துள்ளார்

தமிழ் சினிமாவில் தல என்றும் பெருமையுடன் ரசிகர்களால் அழைக்கப்படுபவர் அஜித்குமார். இவர் ஆரம்பத்தில் சினிமாவில் சில சறுக்கல்கள் இருந்தாலும் அதன்பின்பு தெளிவாகி மாபெரும் வெற்றி படங்களை கொடுத்தார்அஜித்குமார்.

இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வசூலில் மாபெரும் வெற்றியை பெறும். சமீபத்திய நடிப்பில் வெளியான விசுவாசம் கூட இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக கலெக்ஷனை பெற்ற படமாக திகழ்கிறது. சினிமாவில் மட்டுமின்றி அஜித் பொதுவாழ்விலும் ஒரு வசூல் மன்னன் தான். எப்படின்னு கேட்கிறீங்களா அஜித் அவர்கள் தன்னை நாடி வரும் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பெரும் உதவி செய்து வருகிறார்.

பல நடிகர்கள் மீடியாக்களை வரவைத்து உதவி செய்யும் இந்த காலகட்டத்தில் மீடியாக்களுக்கு தெரியாமல் பல நல்ல காரியங்களை நல்ல உதவிகளை தல அஜித்குமார் செய்து வருகிறார். சமீபத்தில் தல அஜித்குமார் செய்த ஒரு உதவி தற்போது வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் தல அஜித்குமார் சுமார் 5000 நபர்களுக்கு கண் பார்வையை திரும்பப் பெற்று தந்துள்ளார். ஆம்,

இது உண்மைதான் மறைந்த முன்னாள் நடிகர் ஜெய்சங்கரின் மகனுமாகிய முன்னால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏவுமான விஜய் சங்கர் ஒரு பிரபல மருத்துவர். இவர் அஜித் அவர்களுக்கு மிகுந்த நெருக்கமான நண்பரும் கூட சமீபத்தில் ராதாரவி ஒரு பேட்டியில் தல அஜித் அவர்களை பற்றி உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு காரியத்தை சொல்லுங்கள் என்று கேட்டதற்கு அவர் தல அஜித்குமார் 5000 நபர்களுக்கு கண் பார்வைக்கு ஏற்பாடு செய்துள்ளார். என்றும் மேலும் செய்து கொண்டிருக்கிறார் என்றும் சொல்லியிருக்கிறார்.

தற்போது, அஜித் அவர்கள் செய்த இந்த மாபெரும் நன்மை 5000 நபர்களுக்கு மட்டுமின்றி 5000 குடும்பங்களில் இது வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இதுபோல தல அஜித்குமார் எண்ணற்ற உதவிகளை மீடியாவிற்கு தெரியாமல் செய்து வருகிறார்

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.