பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் அஜய் தேவ்கன். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெறும்.
மேலும் இவர் படங்களில் சமூக அக்கறை கொண்ட கருத்துகளை மையமாக வைத்து பல படங்களை எடுத்திருக்கிறார்.
உதாரணமாக சிங்கம், சன் ஆப் சர்தார், ரெய்டு, பூஜ்: இந்தியாவின் பெருமை, மைதான், சிவாயே போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது ராஜமௌலி இயக்கத்தில் R.R.R படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த மாதம் 15-ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியப் படையினருக்கும் சீன படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் சுமார் 20 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இச்சம்பவத்தை மையமாக வைத்து அஜய் தேவ்கன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் சம்பந்தமான தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.