அம்மா அப்பாவுக்கு பிறகு என்னுடன் இருப்பது நீதான் – கவின் உருக்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக சின்னத்திரையில் பிரபலமானவர் கவின். அதன் பின் ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

சமீபத்தில் விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் மூன்றாம் பாகத்தில் கலந்து கொண்டு இறுதி வரை சென்றார். அந்தப் நிகழ்ச்சியின் மூலம் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தினார் கவின்.

இந்நிலையில், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய பழைய நினைவுகளை பதிவிட்டு வரும் கவின். தனது வீட்டில் பயன்படுத்திவரும் டேபிள் ஃபேன் ஒன்றை பதிவிட்டு தன்னுடன் 30 ஆண்டுகளாக இது பயணித்து வருகிறது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்து அவரது ரசிகர்கள் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு ஆதரவாக எப்பொழுதும் நாங்கள் இருப்போம் என்றும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.

Exit mobile version