
இந்தியன் 2 படத்தில் புதிய வரவாக நடிகர் விவேக் அவர்கள் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது முதன் முறையாக நடிகர் விவேக் அவர்கள், கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ள படமாக கருதப்படுகிறது.
ஏனெனில், இதற்கு முன்பு விவேக் அவர்களின் குருநாதர் கே.பாலச்சந்தர் அவர்கள் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடித்த பார்த்தாலே பரவசம் என்ற திரைப்படத்தில் கமலஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.
இந்நிலையில் சங்கர் அவர்கள் இயக்கத்தில் தயாராகிவரும் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை படக்குழு.
படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர் ராகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்திற்கான சூட்டிங் ராஜமுந்திரியில் சில நாட்களுக்கு முன்பு சில நாட்களுக்குப் பிறகு மறு தொடக்கம் செய்யப்பட்டது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் இதற்கு முன்பு விஸ்வரூபம் படத்தில் கமலஹாசனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.