தமிழில்

விஜய் ரசிகர்கள் 50 பேர் மீது வழக்கு?


விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. சர்கார் படத்தை கொண்டாடும் விதமாக விஜய் படம் வெளியான தியேட்டர்களில் அவரது கட் டவுட், மெகா சைஸ் டிஜிட்டல் பேனர்கள், போஸ்டர் உள்ளிட்டவைகளை விஜய் ரசிகர்கள் வைத்து, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், குடியாத்தம் பகுதியில் 6 தியேட்டர்களில் சர்கார் படம் வெளியானது. இதையொட்டி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் குடியாத்தம் ஒன்றிய விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் கலைச்செல்வம் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் அலங்கரிக் கப்பட்ட விஜய் படத்தை வைத்து குடியாத்தம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ரத யாத்திரையாக சென்றனர். எனவே, அனுமதியின்றி ரத யாத்திரை நடத்தியதாக விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் கலைச்செல்வம் உட்பட 50 பேர் மீது குடியாத்தம் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker