
தமிழ் ரசிகர்களால் சின்ன குஷ்பூ என்று அழைக்கப்படுபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் வேலாயுதம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர்.
இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் வசூலில் மாபெரும் வெற்றியை பெற்ற படங்களாக அமைந்தது.
ALSO READ | ரஜினிக்கு மகளாக நடிக்கிறேனா கீர்த்தி சுரேஷ் : அண்ணாத்த
சமீப காலமாக சினிமாவை விட்டு தள்ளியிருக்கும் ஹன்சிகா மோத்வானி தன் கைவசம் ‘மகா’ என்ற படத்தை மட்டும் வைத்துள்ளார்.

இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ‘யாரடி நீ மோகினி புகழ்’ மித்ரன் R. ஜவஹர் இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக ஹன்சிகா மோத்வானி இரண்டாவது முறையாக கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
இதற்கு முன் 2011 ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷ் ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடித்திருந்தார்.