தமிழில்

மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிக்கிறார் வரலட்சுமி!

‘போடா போடி’ படத்தின் மூலம் சிம்பு ஜோடியாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து ‘தாரை தப்பட்டை’, ‘விக்ரம் வேதா’, ‘நிபுணன்’, ‘சத்யா’ ஆகிய படங்களில் ஹீரோயின் மட்டுமின்றி, முக்கிய வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார் வரலட்சுமி. விஷாலின் ‘சண்டக்கோழி 2’, கவுதம் கார்த்திக்கின் ‘மிஸ்டர் சந்திரமெளலி’, ஜெய்யின் ‘நீயா 2’, விஜய்யின் ‘சர்கார்’, ‘எச்சரிக்கை: இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘வெல்வெட் நகரம்’ ஆகிய படங்கள் தற்போது வரலட்சுமி கைவசம் உள்ளன. இதுதவிர, விமல் ஜோடியாக ‘கன்னி ராசி’ படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஜேகே இயக்கும் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் வரலட்சுமி. இந்தப் படத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேடத்தில் அவர் நடிக்கிறார். சாய் சமரத் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker