தமிழ் சினிமா செய்திகள்

பைரவா படத்தின் டீசெர் ரிலீஸ் தேதி மற்றும் செய்திகள்!

‘தெறி’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இளையதளபதி விஜய் நடிக்கும் புதிய படம் ‘பைரவா’ இப்படத்தில் முதல்முதலாக கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

‘பைரவா’ படத்தை ஆழகி தமிழ்மகன் புகழ் பரதன் இயக்கி வருகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சதீஷ், அபர்ண வினோத், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சிஜா ரோஸ், தம்பி ராமைய, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘பைரவா’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணனன், ஒளிபதிவு கும்கி எம் சுகுமார், இப்படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் சார்பாக பாரதி ரெட்டி தயாரிக்கிறார்.

‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை பின்னிமில்லில் கலர்புல்லான திருவிழா பாடல் ஒன்று படமாக்கப்பட்டது.

இந்நிலையில் ‘பைரவா’ படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியள்ளது. இப்படத்தில் விஜய்க்கும் சதிஷ்க்கும் இடையிலான காமெடி காட்சிகள் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெரும் என்று சொல்லப்படுகிறது, மேலும் இந்த படத்தில் வழக்கமாக விஜய் படத்தில் உள்ள காமெடி, செண்டிமெண்ட், மாஸ் காட்சிகள், ஆக்சன், விறுவிறுப்பு என அனைத்தும் அதிகம் இருப்பதால் இந்த படம் அனைத்து தரப்பினர்களையும் கவரும்’ என்று படக்குழுவினர் சொல்கிறார்கள்.

‘பைரவா’ படத்தின் போஸ்ட்புரடொக்ஷன்ஸ் பணிகள் வரும் நவம்பர் இறுதியில் இருந்து தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

‘பைரவா’ படத்தின் முன்னோட்டம் வரும் அக்டோபர் 29ஆம் தேதி மாலை 5pm  வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது. படம் பொங்கல் வெளியாகும்.

vijay
bairavaa teaser trailer on october 29 at 5pm.

 

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.