தமிழில்

பிக்பாஸ் வீட்டில் இந்தவாரம் வெளியேறப்போவது யார்?

இன்று நடக்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வெளிவர உள்ள விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலை வெளியிட உள்ளார். மேலும் இன்று நடக்கவுள்ள நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் அனைத்து பாடல்களையும் பாடி அசத்த உள்ளார். இந்த நிகழ்ச்சி இன்று இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

mamathi
mamathi

மற்றும், இன்று இந்த வார வெளியேற்ற ஓட்டெடுப்பு முடிவுகளை வெளியிட உள்ளார். நேற்று ஏற்கெனவே நடிகர் பொன்னம்பலம் அவர்கள் வெளியேற்ற படுவதில் இருந்து காப்பாற்றப்பட்டார். இன்னும் பிக்பாஸ் வீட்டில் மீதமுள்ள போட்டியாளர்களில் பாடகர் அனந்த் வைத்தியநாதன் மற்றும் தொகுப்பாளினி மமதி சாரி மற்றும் நடிகை மும்தாஜ் அவர்கள் மூன்றுபேர் மீதம் உள்ளனர். இவர்களில் கமல்ஹாசன் அவர்கள் யாரை வெளியேற்ற போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர். எங்களுக்கு கிடைத்த தகவல் படி தொகுப்பாளினி மமதி சாரி வெளியேற்றப்படுவர் என்பது உறுதியாகியுள்ளது. மற்றும் நேற்று நடந்த நிகழ்ச்சியின் போது நடிகரும் விஜய் டிவி தொகுப்பாளருமான பாலாஜி சென்ற வாரம் முழுவதும் அவரது மனைவியை தகாத வார்த்தைகளில் வசைபாடியது குறித்து குறும் படம் போட்டு அவருக்கு அறிவுரை வழங்கினார் நடிகர் கமல்ஹாசன்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker