தமிழில்

நாடாளுமன்றத் தேர்தலில் விஜய்யின் ஆதரவு யாருக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்!

நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு நீண்டகாலமாக அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதனை உறுதி செய்வது போல், சமீபகாலமாக அவரது படங்களில் அரசியல் நெடி சற்று அதிகமாகவே உள்ளது. சர்காரில் நேரடியாகவே ஆளும்கட்சி பற்றி விமர்சிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நெல்லை மாவட்டம், வடக்கன்குளம் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான சந்திரசேகரும், அவரது மனைவி ஷோபாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கக் கூடாது என்பதுதான் தமிழர்களின் முடிவு. இதில் அனைவரும் தெளிவாக உள்ளனர். தற்போதைய ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் மிகவும் அச்சமடைந்துள்ளனர். சமூகத்திற்கு நல்லது செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜய்யின் ஆதரவு யாருக்கு? என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். எனது மகன் விஜய்யை டாக்டராக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால், அவர் ஆக்டராகிவிட்டார்” என இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.