தமிழில்

நவம்பர் முதல் வாரத்தில் ‘2.0’ டிரைலர்! | ‘2.0’ trailer November 1st week

2010-ஆம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் ‘எந்திரன்’. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மீண்டும் ரஜினி-ஷங்கர் கூட்டனியில் இரண்டாம் பாகம் அதிக பொருட்செலவில் ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ரஜினிகாந்த், உடன் அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

‘2.0’ trailer november 1st week
‘2.0’ trailer november 1st week

இப்படத்தின் பெரும்பாலான வேலைகளும் முடிவடைந்து விட்டது என்றும், ஏற்கெனவே அறிவித்தது மாதிரி இப்படம் நவம்பர் 29-ஆம் தேதி வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இப்படத்தின் அனைத்து பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ஹிட்டாகியுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ‘2.0’ படத்தின் டிரைலரை நவம்பர் 3-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்கள் என்றும் அதற்காக சென்னையில் ஒரு விழா நடக்க இருக்கிறது என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker