தமிழில்

‘தேவ்’ ஃபர்ஸ்ட் லுக் | DEV First look


‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தேவ்’. ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் டூயட் பாடி ஆடி வருகிறார்.

முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.விக்னேஷ், அம்ருதா, ரேணுகா ஆகியோர் நடிக்கின்றனர். கெஸ்ட் ரோலில் ‘நவரச நாயகன்’ கார்த்திக் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இதற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இதனை ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker