தமிழில்

தேவர் மகன் 2 அறிவிப்பு இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியாகிறது!

தேவர் மகன் 2 அறிவிப்பு இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியாகிறது!
தேவர் மகன் 2 அறிவிப்பு இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியாகிறது!

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் ஃபினாலே இன்று இரவு நடைபெறுகிறது. ஐஸ்வர்யாவுக்கு பதில் ரித்விகாவை டைட்டில் வின்னராக அறிவிக்கப் போகிறாராம் பிக் பாஸ். இந்த காட்சியை பார்க்கத் தான் பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிக் பாஸ் 2 ஃபினாலே குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் கமல் தேவர் மகன் கெட்டப்பில் வருகிறார். இது முடிவல்ல, பல பயணங்களின் ஆரம்பம் என்று அவர் சொல்வதை கேட்பதை விட அவர் உடை மீது தான் பார்வையாளர்களின் கண்கள் செல்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலேவில் இந்தியன் 2 படம் எடுக்கப் போவதாக இயக்குனர் ஷங்கர் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் கமலின் கெட்டப்பை பார்த்தால் இன்றைய மேடையில் தேவர் மகன் 2 வரும் என்று அறிவிப்பு வெளியாகுமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker