தமிழில்

தெலுங்கு படங்களையெல்லாம் பிண்ணுக்கு தள்ளி மெர்சல் தெலுங்கில் வசூல் சாதனை!

தெலுங்கு படங்களையெல்லாம் பிண்ணுக்கு தள்ளி மெர்சல் தெலுங்கில் வசூல் சாதனை!

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் தெலுங்குப் பதிப்பான அதிரிந்தி கடந்த வாரம் 9ம் தேதி ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சுமார் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. அதிரிந்தி ஆந்திரா, தெலுங்கானாவில் அரங்குநிறைந்த காட்சியாக ஓடிகொண்டிருக்கிறது. இதனால் அங்கு வெளியான கேர் ஆப் சூர்யா, ஒக்கடு மிகிலாடு ஆகிய படங்கள் வெளிவந்தன. அதற்கு முந்தைய வாரம் பிஎஸ்வி கருட வேகா, நெக்ஸ்ட் நுவ்வே, ஏஞ்சல் ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த நேரடித் தெலுங்குப் படங்களையெல்லாம் முந்திவிட்டு கடந்த வார பாக்ஸ் ஆபிசில் அதிரிந்தி படம்தான் முதலிடத்தில் இருந்ததாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் மூலம் விஜய் தெலுங்கிலும் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker