தளபதி ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு தேதி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் மாஸ்டர். படத்தின் படப்பிடிப்பு சுமார் மூன்று கட்டங்களாக நடைபெற்று வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்று தளபதி ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருந்த நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அதாவது மார்ச் மாதம் 15-ஆம் தேதி மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இவர் இசையில் ஏற்கனவே குட்டி ஸ்டோரி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மாஸ்டர் படத்தின் இந்த அறிவிப்பை கேட்ட தளபதி ரசிகர்கள் தற்போது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் இணைய தளங்களில் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.

master audio 15 march2020
master audio 15 march2020
Exit mobile version