தமிழ் சினிமா செய்திகள்

சீனாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்!

சீனாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்!
சீனாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்!

விஜய், அட்லீ கூட்டணியில் வெளியான படம் மெர்சல். இப்படம் உலகளவில் இதுவரை 250 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தற்போது, மெர்சல் திரைப்படத்தை சீனாவில் வெளியிட படத்தின் தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சீன மொழியில் மெர்சல் திரைப்படத்தை டப்பிங் செய்வதற்கான பணிகள் துவங்கவுள்ளதாகவும் இந்த வருட இறுதியில் சீனாவில் படம் வெளியாக வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து சில பாலிவுட் படங்களும் பாகுபலி படமும் சீனாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தமிழ் படங்கள் எதுவும் இதுவரை சீனாவில் வெளியாகவில்லை. எனவே மெர்சல் படம் சீனாவில் வெளியாகுமானால், சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படம் எனும் பெருமையையம் மெர்சல் திரைப்படம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.