தமிழில்

சிம்புவுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் கதாநாயகி

மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போனவர் சிம்பு. இவர் நடிப்பில் வெளியாகிய படங்கள் வெளியாவதற்கு முன்பே பல சிக்கல்களையும் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தும். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகிய வந்தா ராஜாவாக வருவேன் படம் மாபெரும் வெற்றி பெறவில்லை என்றாலும் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் எந்தவித கஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில், நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு அரசியல்வாதியாக நடிக்கிறார் என்பது நாம் அறிந்த செய்தி. மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல ஒளிப்பதிவாளர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் தற்போது நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த செய்தியை ட்விட்டரில் கல்யாணி பிரியதர்ஷினி பகிர்ந்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் மாநாடு படத்தின் கதை அம்சம் மிகவும் சிறப்பாக உள்ளது என்றும் நிச்சயம் இது மாபெரும் வெற்றி பெறும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் அறிவித்துள்ளார்.

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.