தமிழில்

சிம்புவின் சொத்துகளை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

HC Gives Final Warning To Simbu To Pay The Due Amount

நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து ‘அரசன்’ என்ற படத்தை தயாரிக்க பேஸ்சன் மூவி மேக்கர்ஸ் என்ற சினிமா படத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து. இதன்படி நடிகர் சிம்புக்கு முன்பணம் ரூ.50 லட்சத்தை கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி வழங்கியதாகவும் கூறியிருந்தது.

சிம்புவின் சொத்துகளை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சிம்புவின் சொத்துகளை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மேலும், தங்களுடன் செய்து ஒப்பந்தப்படி நடிகர் சிம்பு ‘அரசன்’ படத்தில் நடிக்க முன்வராமல் இழுத்தடித்ததாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதனால், தங்கள் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர சட்டப்படி உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சிம்பு முன்பணத்தை திருப்பி தராவிட்டால், அவரது சொத்துகள் முடக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக சிம்புவின் பொருட்கள் ஜப்தி செய்யப்பமுடும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker