தமிழில்

கள்ளக்கதைகளை படம் எடுப்பவர்கள் முதல்வர் ஆக முடியாது – பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு பேச்சு | Bjp leader Tamilisaisoundararajan about sarkar

TamilisaiSoundararajan about sarkar
TamilisaiSoundararajan about sarkar

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் நடைபெற்ற மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். சர்க்கார் விவகாரம் குறித்த கேள்விக்கு, திரைத்துறையில் நேர்மை இல்லை என்பதை பாக்யராஜ் உள்ளிட்டோர் ஒப்புக் கொண்டிருப்பதாக தமிழிசை குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், திரைத்துறையில் ஏராளமான குழப்பங்கள் உள்ளன என்பதுதான் உண்மை என்றும். முதல்வர் கனவோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும், கள்ளக்கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கின்றனர் என்றும் கிண்டலாக பதிலளித்தார் தமிழிசை. இந்த பேச்சு நடிகர் விஜயை நேரடியாக தாக்குவது போல் உள்ளது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker