தமிழ் சினிமா செய்திகள்

ஒரே நேரத்தில் ரஜினி கமல் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்

ஒரே நேரத்தில் ரஜினி கமல் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
ஒரே நேரத்தில் ரஜினி கமல் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. 1996-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் ரிலீஸாகி, கடந்த 9-ம் தேதியுடன் 22 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. இந்தநிலையில், கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணி மறுபடி இணைய இருக்கின்றனர். இதற்கான அறிவிப்பு கடந்த வருடம் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இறுதி நாளன்று அறிவிக்கப்பட்டது. முதலில் தில் ராஜு தயாரிப்பதாக இருந்த இந்தப் படம், பின்னர் லைகா புரொடக்‌ஷனுக்கு கைமாறியது. இந்த வருட இறுதியில், அதாவது ‘2.0’ ரிலீஸுக்குப் பிறகு இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என உறுதியான தகவல் கிடைத்துள்ளது. ஆகா ஒரே நேரத்தில் ரஜினி கமல் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்.

Tags

livecinemanews

We are very keen to Read & Write about latest cinema updates. We respect the film technicians effort and work, so we decided to help them to reach people with our Hands.

Related Articles

Leave a Reply

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker
நீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.