தமிழில்

அன்று பாஜக; இன்று அதிமுக விஜய் காட்டில் வசூல் மழை!

Sarkar100CrIn2Days
Sarkar100CrIn2Days

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ’மெர்சல்’ ரிலீஸ் நேரத்தில் பெரும் சர்ச்சைகளில் சிக்கி அதுவே படத்தின் இலவச விளம்பரமாக மாறி வசூலில் சாதனை படைத்தது. அந்த வரிசையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொலிட்டிக்கல் சட்டயரையாக வந்திருக்கும் படம் தான் ’சர்கார்’. படத்தின் டைட்டிலைப் போலவே பக்காவான அரசியல்படமான இதில் தமிழகத்தின் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது ஆளுங்கட்சிக்காரர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியதையடுத்து நேற்று முதல் படத்துக்கு எதிராக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படி சர்கார் பற்றி பரபரப்பாகப் பேசப்படுவதால் இந்தப் படத்தில் அப்படி என்ன தான் அரசியல் பேசியிருக்கிறார்கள்? என்று ரசிகர்கள் ஆவலோடு தியேட்டர்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாக ரிலீசான இரண்டே நாட்களில் சர்கார் படம் 100 கோடியை வசூல் செய்து புதிய சாதனை படைத்திருக்கிறது. விஜய் நடித்த படங்களிலேயே ரிலீசான இரண்டே நாட்களில் 100 கோடியை வசூல் செய்தது இதுவே முதல்முறையாம்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker