தமிழில்

அதிமுகவினர் போராட்டத்தால்: ‘சர்கார் ‘ பட காட்சிகள் ரத்து?


விஜய் நடிப்பில் நேற்று முன் தினம் (நவம்பர் 6) உலகம் முழுவதும் ரிலீஸான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், முதல் நாளே இதுவரை எந்தப் படமும் செய்யாத வசூல் சாதனையைப் படைத்துள்ளது. இந்நிலையில், ‘சர்கார் படத்தின் ஒரு காட்சியில், தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளை அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் துணை நடிகர்கள் தூக்கி எறிவது போன்ற காட்சி இருப்பதாகவும், அப்படத்தின் வில்லி பாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் இயற் பெயரை சூட்டியதாகவும் அதிமுகவினர் கடந்த 2 நாளாக கொந்தளிப்பில் உள்ளனர். இன்று மதியம் மதுரையில் அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா தலைமையில் அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ‘சர்கார்’ படம் ஓடிய அண்ணாநகர் சினிப்ரியா காம்ளக்ஸ் தியேட்டர் முன் முற்றுகைப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், நடிகர் விஜய்யை கைது செய்ய வேண்டும், சர்காரில் உள்ள சர்ச்சைக்குரிய கருத்துகளையும், காட்சிகளையும் நீக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அதனால், தியேட்டர் முன் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதைதொடர்ந்து அப்பகுதியில் போலீஸார் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடனடியாக குவிக்கப்பட்டனர். அதிமுகவினர் போராட்டத்தால் சினிப்பரியா தியேட்டரில் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் மதியம் 2 மணி படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அதற்கான அறிவிப்பும் தியேட்டர் முன் ஓட்டப்பட்டது. இதையடுத்து, அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். தியேட்டருக்கு சர்கார் படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker